அடுத்தடுத்து சில நிமிடங்களில் ட்வீட் பதிவு செய்த கமல்-ரஜினி.. யாருக்கு வாழ்த்து?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இருவரும் தங்கள் எக்ஸ் பக்கங்களில் அடுத்தடுத்து சில நிமிடங்களில் ட்வீட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
இன்று தந்தை பெரியார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் பிறந்தநாள்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதை ஒட்டி, கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் தந்தை பெரியாருக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் பதிவில் கூறியிருப்பதாவது:
சமத்துவம், சமூகநீதி, தீண்டாமை, பெண் விடுதலை, பகுத்தறிவு, அரசியல், அறிவியல் என அனைத்திலும் முன்னோக்கிச் சிந்தித்தவர் தந்தை பெரியார். முற்போக்குச் சிந்தனைகளை மக்களின் மனங்களில் விதைக்க தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட பெருமகனாரின் பிறந்தநாளில் அவரது கருத்துகளை உள்ளம் ஏந்துவோம்.
இதையடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரதமர் நரேந்திர மோடிக்கு எக்ஸ் பக்கத்தில் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்த் தனது பதிவில், "மாண்புமிகு பிரதமர் மோடிக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் உடல் நலம் மற்றும் மகிழ்ச்சிக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இருவரின் இந்த ட்வீட்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
A very happy birthday to our most respected honourable Prime minister dear Shri @narendramodi ji 🙏🏻 I pray to god to always bless you with good health and happiness.
— Rajinikanth (@rajinikanth) September 17, 2024
சமத்துவம், சமூகநீதி, தீண்டாமை, பெண் விடுதலை, பகுத்தறிவு, அரசியல், அறிவியல் என அனைத்திலும் முன்னோக்கிச் சிந்தித்தவர் தந்தை பெரியார்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 17, 2024
முற்போக்குச் சிந்தனைகளை மக்களின் மனங்களில் விதைக்க தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட பெருமகனாரின் பிறந்தநாளில் அவரது கருத்துகளை உள்ளம் ஏந்துவோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com