முதல்முறையாக வாழ்த்துக்களுடன் மகிழ்ச்சியை பரிமாற்றம் செய்து கொண்ட கமல்-ரஜினி

  • IndiaGlitz, [Wednesday,November 15 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவருமே சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டுவிட்டரில் பிரபலம் என்றாலும் ஒருவர் கூறிய கருத்தை இன்னொருவர் ரீடுவீட் செய்ததோ, வாழ்த்து தெரிவித்ததோ கிடையாது. முதல்முறையாக நேற்று இருவரும் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியை பரிமாறி கொண்டு வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

ஆந்திர அரசு நேற்று ரஜினி, கமல் ஆகிய இருவருக்கும் என்.டி.ஆர்.விருது அளித்து கெளரவித்தது என்பதை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த கமல்ஹாசன், 'என்.டி.ஆர். தேசிய விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்த்துகள். எனது சினிமா வாழ்வின் தொடக்கம் முதலே ஆதரவு அளித்து வரும் ஆந்திர அரசுக்கும் நன்றி’ என்று பதிவு செய்திருந்தார்.

இந்தப் பதிவுக்கு கமல் டுவிட்டர் பக்கத்திலேயே நன்றி தெரிவித்த ரஜினிகாந்த், ’நன்றி கமல். உங்களுக்கும் வாழ்த்துகள்’ என்று பதிலளித்துள்ளார். இந்த இரு டுவீட்டுக்களையும் கமல், ரஜினி ரசிகர்கள் லைக் செய்தும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

More News

சட்டமன்ற கூட்டத்தை கட் அடித்துவிட்டு குத்தாட்டம் ஆடிய எம்.எல்.ஏ

கர்நாடக மாநிலத்தில் தற்போது சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு அந்த விழாவில் குத்தாட்டம் ஆடியதாக எம்.எல்.ஏ ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கொன்று பார், வென்று தீர்வேன்: குத்திக்கிழிக்கும் வீடியோ குறித்து கமல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'இந்து தீவிரவாதிகள் இனி இல்லை என்று சொல்ல முடியாது' என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு நாடு முழுவதும் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது.

கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கைக்கு கமல் பாராட்டு

பிறப்பு சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று சமீபத்தில் கேரள அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்து அதனை சுற்றறிக்கையாக வெளியிட்டிருந்தது.

பசிக்கு மதமில்லை, விவசாயிகள் ஒன்றுகூட கமல் அழைப்பு

கமல்ஹாசனின் அரசியல் பாதை வித்தியாசமானது என்பதை அவரது நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியவரும். குறிப்பாக விவசாயிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் கமல்ஹாசன்.

குழந்தைகளுடன் குழந்தைகள் தின விழாவை கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்

இன்று நவம்பர் 14 குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தான் ஒரு நாட்டின் எதிர்கால தூண்கள் என்பதால் அவர்களை பிரபலங்களும் போற்றியும் ஆசிர்வத்தும் வருகின்றனர்.