முதல்முறையாக வாழ்த்துக்களுடன் மகிழ்ச்சியை பரிமாற்றம் செய்து கொண்ட கமல்-ரஜினி

  • IndiaGlitz, [Wednesday,November 15 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவருமே சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டுவிட்டரில் பிரபலம் என்றாலும் ஒருவர் கூறிய கருத்தை இன்னொருவர் ரீடுவீட் செய்ததோ, வாழ்த்து தெரிவித்ததோ கிடையாது. முதல்முறையாக நேற்று இருவரும் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியை பரிமாறி கொண்டு வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

ஆந்திர அரசு நேற்று ரஜினி, கமல் ஆகிய இருவருக்கும் என்.டி.ஆர்.விருது அளித்து கெளரவித்தது என்பதை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த கமல்ஹாசன், 'என்.டி.ஆர். தேசிய விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்த்துகள். எனது சினிமா வாழ்வின் தொடக்கம் முதலே ஆதரவு அளித்து வரும் ஆந்திர அரசுக்கும் நன்றி’ என்று பதிவு செய்திருந்தார்.

இந்தப் பதிவுக்கு கமல் டுவிட்டர் பக்கத்திலேயே நன்றி தெரிவித்த ரஜினிகாந்த், ’நன்றி கமல். உங்களுக்கும் வாழ்த்துகள்’ என்று பதிலளித்துள்ளார். இந்த இரு டுவீட்டுக்களையும் கமல், ரஜினி ரசிகர்கள் லைக் செய்தும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.