ஆழ்துளைக் கிணறுகள் விவகாரம்: கமல், ரஜினி கருத்து
- IndiaGlitz, [Sunday,October 27 2019]
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் என்ற சிறுவனை மீட்க கடந்த 36 மணி நேரமாக மீட்பு படையினர் போராடி வரும் நிலையில் இந்த குழந்தை நலமுடன் மீண்டு வரவேண்டும் என லட்சக்கணக்கானோர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மேலும் பல அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களும் சுர்ஜித் நல்லபடியாக மீட்கப்பட வேண்டும் என்று தங்களது கருத்தை கூறி வருகின்றனர். இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது: ஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழத்தில் இருக்கிறது. ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும். ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும்.
அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த விவகாரம் குறித்து கூறியதாவது: சிறுவன் சுர்ஜித் நலமுடன் மீண்டு வரவேண்டும். ஆழ்துளை கிணறு விவகாரத்தில் பெற்றோர்கள் மற்றும் அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
ஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழத்தில் இருக்கிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) October 27, 2019
ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும்.
ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும்.