நாகரீக அரசியலை நோக்கி கமல்-ரஜினி
- IndiaGlitz, [Wednesday,January 24 2018]
பொதுவாக அரசியல் மேடை என்றாலே அனல் கக்கும் விமர்சனங்கள் இருக்கும். அதிலும் ஒருசில அரசியல் மேடைகளில் அச்சில் ஏற்றமுடியாத வார்தைகள் அரசியல்வாதிகள் வாயில் இருந்து உதிர்க்கும். கடந்த ஐம்பது ஆண்டுகளாக நாகரீக அரசியலை தமிழகத்தில் வெகுசிலரே பின்பற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் திராவிட இயக்கங்களை அடுத்து கமல், ரஜினி கட்சிகளின் ஆதிக்கம் தமிழகத்தில் மேலோங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பிப்ரவரி 21ஆம் தேதி கமல்ஹாசனும், வெகுவிரைவில் ரஜினியும் தனிக்கட்சி ஆரம்பிக்கவுள்ளனர்.
இந்த நிலையில் கமல்ஹாசன் தனது கட்சியில் சேர வருபவர்களிடம் கூறிய முக்கிய கண்டிஷன், எந்த காரணத்தை முன்னிட்டும் ரஜினியை தன்முன் விமர்சனம் செய்யக்கூடாது என்றும் ரஜினியை திட்டினால் தான் சந்தோஷப்படுவேன் என்று நினைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளாராம்.
ஏற்கனவே சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த ரஜினி, நாம் யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறியது தெரிந்ததே. எனவே இனி வருங்கால தமிழக அரசியல் நாகரீக அரசியலை நோக்கி செல்லும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.