கமல்-ரஜினி இருவருக்கும் சேர்த்தே 10% ஓட்டுதான் கிடைக்கும்: சாருஹாசன்
- IndiaGlitz, [Monday,October 09 2017]
ஒருபக்கம் உலகநாயகன் கமல்ஹாசன் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிக்க கிட்டத்தட்ட தயாராகிவிட்டார். அவர், வரும் நவம்பர் 7ஆம் தேதி அவருடைய பிறந்த நாளில் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் போர் வரும்போது பார்த்து கொள்ளலாம் என்று கூறிய ரஜினியும் அரசியலுக்கு வருவதற்கு ஆயத்தமாக இருக்கின்றார். 'காலா' படப்பிடிப்பு முடிந்தபின்னர் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கமல், ரஜினி இருவருக்கும் கிடைக்கும் வாக்குகள் எவ்வளவு என்பது குறித்து தனது கணிப்பை கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் கூறியுள்ளார்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் சேர்ந்து கட்சி ஆரம்பித்தாலோ அல்லது தனித்தனியாக கட்சி ஆரம்பித்தாலோ மொத்தமாக இருவருக்கும் 10% வாக்குகள் கிடைக்கும் என்றும் மீதி 90% வாக்குகள் அரசியல் கட்சிகளுக்கே கிடைக்கும் என்பதே தனது கணிப்பு என்று கூறியுள்ளார். எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கு கிடைத்த வாக்குகள் சினிமா என்பதையும் தாண்டி கிடைத்த வாக்குகள் என்றும் சினிமா பைத்தியத்தால் வாக்குகள் கிடைத்தது என்றால் ஜெயலலிதா இரண்டுமுறை தோல்வி அடைந்திருக்க மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சாருஹாசன் கூறியதில் இருந்து இனிமேல் திரைத்துறையில் இருந்து இன்னொரு முதல்வர் வருவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.