டுவிட்டர் களையெடுப்பால் கமல்-ரஜினிக்கு ஏற்பட்ட நஷ்டம்
- IndiaGlitz, [Saturday,July 14 2018]
உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரில் கோடிக்கணக்கானோர் கணக்கு வைத்துள்ளனர் என்பது தெரிந்ததே. குறிப்பால பிரபலங்கள் பலர் தங்கள் கருத்தை தெரிவிக்க டுவிட்டரை பயன்படுத்துவதால் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டுவிட்டரில் போலி கணக்குகளை முடக்கும் பணியை டுவிட்டர் நிர்வாகம் செய்து வருகிறது. இதனால் டிரம்ப், மோடி உள்பட பல பிரபலங்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் ஃபாலோயர்களை இழந்துள்ளனர்.
அந்த வகையில் கோலிவுட் மற்றும் அரசியல் பிரபலங்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரின் ஃபாலோயர்களும் அதிகளவில் குறைந்துள்ளது. கமல்ஹாசன் டுவிட்டர் அக்கவுண்டை ஃபாலோ செய்தவர்களில் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமனோர் கணக்குகளும், ரஜினியின் டுவிட்டர் அக்கண்டை ஃபாலோ செய்தவர்களில் சுமார் 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதால் இவர்கள் இருவரின் ஃபாலோயர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.