பெரியார் சிலை பிரச்சனை: கருத்தில் முரண்பட்ட கமல்-ரஜினி

  • IndiaGlitz, [Thursday,March 08 2018]

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்த எச்.ராஜா, அதன் பின்னர் அந்த கருத்து தன்னுடைய கவனத்திற்கு வராமல் அட்மின் பதிவு செய்த கருத்து என்றும், அதற்காக தான் வருந்துவதாகவும் தெரிவித்தார்.

எச்.ராஜா பதிவு குறித்தும் வருத்தம் தெரிவித்தது குறித்தும் கருத்து தெரிவித்த கமல், அவருடைய வருத்தத்தையும், அட்மின் குறித்து அவர் கூறிய நொண்டிச்சாக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று கருத்து கூறிய ரஜினிகாந்த், 'பெரியார் சிலை உடைக்கப்பட்டதும், இதுகுறித்து பேசப்பட்டதும் காட்டுமிராண்டித்தனம் என்றும், இதற்கு ராஜா அவர்கள் வருத்தம் தெரிவித்துவிட்டதால் இத்துடன் இந்த பிரச்சனையை பெரிதாக்காமல் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் கூறி கமல் கருத்தில் இருந்து முரண்பட்டுள்ளார்.

ஏற்கனவே தமிழ் வளர வேண்டும் என்றால் தமிழில் பேச வேண்டும் என்று கமலும், தமிழில் பேசினால் மட்டும் தமிழ் வளராது, ஆங்கிலத்தில் புலமை பெற்று தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும் என்று ரஜினியும் மாறுபட்ட கருத்துக்களை கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பெரியார் சிலை விவகாரம்: குரல் கொடுத்தார் ரஜினி

கடந்த இரண்டு நாட்களாக பெரியார் சிலை விவகாரம் குறித்து தமிழகமே பெரும் பரபரப்பில் உள்ள நிலையில் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் இந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகின்றன.

அம்பிகா, லிவிங்ஸ்டன் வாரிசுகள் இணையும் புதிய தமிழ்ப்படம்

நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாக அறிமுகமாகும் 'கலாசல்' என்ற படத்தின் நாயகியாக நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார்.

ஆய்வாளர் எட்டி உதைத்ததால் கர்ப்பிணி பெண் மரணம். திருச்சியில் பரபரப்பு

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் நேற்றிரவு காவல்துறை ஆய்வாளர் காமராஜ் என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்

திருச்சி கர்ப்பிணி பெண் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கண்டனம்

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த உஷா என்ற கர்ப்பிணி பெண்ணை காவல்துறை ஆய்வாளர் ஒருவர் எட்டி உதைத்ததால் பரிதாபமாக பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் மீது ஆபாச நடிகை போட்ட வழக்கு

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பதவியேற்றது முதல் பல்வேறு சர்ச்சைக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் ஆபாச நடிகை ஒருவர் டிரம்ப் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.