அடுத்தடுத்த சிலமணி நேரங்களில் எம்ஜிஆரின் பாடலை பாடிய கமல்ஹாசன் - முக ஸ்டாலின்!

  • IndiaGlitz, [Friday,December 18 2020]

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக மதுரை உள்பட தென்மாவட்டங்களில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது பிரச்சாரத்தில் அடிக்கடி எம்ஜிஆர் குறித்தும் பேசி வருகிறார். இதற்கு அதிமுக தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்

இந்த நிலையில் நேற்று அரியலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கமல்ஹாசன் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். பிக்பாஸ் குறித்தும் அவர் கடுமையாக விமர்சனம் செய்ததோடு, எம்ஜிஆரின் திரைப்பட பாடல்களுக்கும் கமல்ஹாசன் திரைப்பட பாடல்களுக்கும் உள்ள வித்தியாசத்தையும் கோடிட்டு காட்டினார்

இந்த நிலையில் அடுத்த தமிழக முதல்வரின் விமர்சனத்தை அடுத்து சில நிமிடங்களில் கமலஹாசன் தனது டுவிட்டரில் ’முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று குறிப்பிட்டார். மேலும் எம்ஜிஆர் குறித்து பேசிய முதல்வருக்கு மறைமுகமாக பதிலளிக்கும் விதமாக எம்ஜிஆரின் பாடல் ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்தார். அந்தப் பாடல் இதுதான்:

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்

ஊரார் கால் பிடிப்பார்..

ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை

அவர் எப்போதும் வால் பிடிப்பார்.

'எதிர் காலம் வரும் என் கடமை வரும்.

இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்'


இந்த நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் எம்ஜிஆரின் பாடலை குறிப்பிடுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அதே பாடலை நேரடி நிகழ்ச்சி ஒன்றில் அதிமுகவை விமர்சனம் செய்வதற்காக பாடி காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆரின் ஒரே பாடலை கமல்ஹாசன் மற்றும் முக ஸ்டாலின் ஆகிய இருவரும் அதிமுகவை விமர்சனம் செய்ய சில மணி நேர இடைவெளியில் பயன்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

அவெஞ்சர்ஸ் இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல தமிழ் ஹீரோ!

ஹாலிவுட்டில் வெளியான அவெஞ்சர்ஸ் திரைப்படங்கள் உலகப்புகழ் பெற்றவை என்பதும் அந்த படங்கள் வசூலித்த வசூல் தொகையானது உலகம் முழுவதும் ஆச்சரியப்பட வைத்தது என்பதும் தெரிந்ததே

பிக்பாஸ் வீட்டில் கேப்டனாகிவிட்டாரே இவர்: ஆட்டம் அதிகமாகுமோ?

பிக்பாஸ் வீட்டில் தனக்கென ஒரு குரூப் வைத்துக்கொண்டு ஒரு சிலரின் ஆதரவால் வீட்டில் உள்ள மற்றவர்களை ஆதிக்கம் செய்து வருவதாக அர்ச்சனா மீது ஏற்கனவே

திட்டமிட்ட நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்த நடிகை: சித்ரா ரசிகர்கள் காரணமா?

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா குறித்து நேரலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்த நடிகை ஒருவர் அந்த நிகழ்ச்சியைத் ரத்து செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிக்பாஸ் பார்த்தால் குடும்பம் உருப்படாது: முதல்வர் பழனிசாமி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்

'அந்தாதூன்' ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகர்! இசையமைப்பாளரும் அறிவிப்பு!

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தை தமிழில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பாளரும் நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் திட்டமிட்டிருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.