அடுத்தடுத்த சிலமணி நேரங்களில் எம்ஜிஆரின் பாடலை பாடிய கமல்ஹாசன் - முக ஸ்டாலின்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக மதுரை உள்பட தென்மாவட்டங்களில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது பிரச்சாரத்தில் அடிக்கடி எம்ஜிஆர் குறித்தும் பேசி வருகிறார். இதற்கு அதிமுக தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்
இந்த நிலையில் நேற்று அரியலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கமல்ஹாசன் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். பிக்பாஸ் குறித்தும் அவர் கடுமையாக விமர்சனம் செய்ததோடு, எம்ஜிஆரின் திரைப்பட பாடல்களுக்கும் கமல்ஹாசன் திரைப்பட பாடல்களுக்கும் உள்ள வித்தியாசத்தையும் கோடிட்டு காட்டினார்
இந்த நிலையில் அடுத்த தமிழக முதல்வரின் விமர்சனத்தை அடுத்து சில நிமிடங்களில் கமலஹாசன் தனது டுவிட்டரில் ’முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று குறிப்பிட்டார். மேலும் எம்ஜிஆர் குறித்து பேசிய முதல்வருக்கு மறைமுகமாக பதிலளிக்கும் விதமாக எம்ஜிஆரின் பாடல் ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்தார். அந்தப் பாடல் இதுதான்:
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்..
ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்.
`எதிர் காலம் வரும் என் கடமை வரும்.
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்'
இந்த நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் எம்ஜிஆரின் பாடலை குறிப்பிடுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அதே பாடலை நேரடி நிகழ்ச்சி ஒன்றில் அதிமுகவை விமர்சனம் செய்வதற்காக பாடி காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆரின் ஒரே பாடலை கமல்ஹாசன் மற்றும் முக ஸ்டாலின் ஆகிய இருவரும் அதிமுகவை விமர்சனம் செய்ய சில மணி நேர இடைவெளியில் பயன்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
`சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
— Kamal Haasan (@ikamalhaasan) December 17, 2020
ஊரார் கால் பிடிப்பார்..
ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்.
`எதிர் காலம் வரும் என் கடமை வரும்.
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்'
முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது ??
— Kamal Haasan (@ikamalhaasan) December 17, 2020
யோவ்.. இது உங்க நைனாவைப் பத்தி எம்.ஜி.ஆர். பாடின பாட்டு pic.twitter.com/XCfDmvvwh0
— kishore k swamy (@sansbarrier) December 17, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com