இன்று வெளியாகும் கமல்-மணிரத்னம் படத்தின் டைட்டில் இதுதானா? மாஸ் தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ’கமல் 234’. இந்த படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மாலை ஐந்து மணிக்கு கமல் - மணிரத்தினம் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் அது மட்டும் இன்றி ஸ்பெஷல் வீடியோ வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இந்த படத்தின் டைட்டிலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
இந்த நிலையில் இந்த படத்திற்கு ’நாயகன் 2’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. கமல் - மணிரத்னம் இணைந்த ’நாயகன்’ திரைப்படம் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ’கமல் 234’ படத்திற்கு ’நாயகன் 2’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
’நாயகன்’ படம் போல் ‘நாயகன் 2’ படமும் ஒரு சூப்பர் ஹிட் படமாக ரசிகர்களுக்கு கிடைக்குமா? ’நாயகன்’ படத்திற்கு தேசிய விருது கிடைத்தது போல் கமல்ஹாசனுக்கு மீண்டும் ஒரு தேசிய விருது கிடைக்குமா? என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
Embrace the EPIC REVEAL! Title announcement video at 5pm today! Stay tuned for an unforgettable experience! #TitleAnnouncementToday5pm #KH234 #Ulaganayagan #KamalHaasan #HBDKamalSir #HBDUlaganayagan@ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @MShenbagamoort3… pic.twitter.com/S1xfNum9bx
— Raaj Kamal Films International (@RKFI) November 6, 2023
Elevated artistry in the works…pls wait with bated breath till 5 pm tomorrow
— Raaj Kamal Films International (@RKFI) November 5, 2023
➡️https://t.co/OyXs55xJa7#KH234 #Ulaganayagan #KamalHaasan
#HBDKamalSir
#HBDUlaganayagan @ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @MShenbagamoort3 @RKFI @MadrasTalkies_… pic.twitter.com/g6Z1AIzKC7
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments