சபரிமலை கோவில் தீர்ப்பு குறித்து கமல், குஷ்பு கருத்து

  • IndiaGlitz, [Friday,September 28 2018]

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்ற அமர்வு இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு பெண்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இந்த தீர்ப்பு குறித்து கூறுகையில், 'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு நல்ல முடிவு' என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு இதுகுறித்து கூறுகையில், 'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு; பெண்களுக்கு சம உரிமை உள்ளது என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு பிரதிபலித்துள்ளது என்று கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தான் வரவேற்பதாக மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் தெரிவித்துள்ளார்.