ஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்: அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்புக்கு பின்னர் கமல்
- IndiaGlitz, [Thursday,September 21 2017]
உலக நாயகன் கமல்ஹாசனை டெல்லி முதல்வர் சற்று முன்னர் அவருடைய வீட்டில் சந்தித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற நிலையில் சற்றுமுன் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது கமல் கூறியதாவது: ஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்களாக தெரிகின்றனர். கெஜ்ரிவால் என்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டதையே நான் பாக்கியமாக கருதுகிறேன். எனது தந்தை காலம் முதல்லே அரசியல் தொடர்புடையவன் நான்.
இந்த சந்திப்பு குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது; கமல்ஹாசனுக்கு நடிகராகவும், நல்ல மனிதராகவும் நான் ரசிகன். நாட்டில் பெரும்பாலானோர் மதவாதத்திற்கு எதிரான கருத்து கொண்டுள்ளனர்