ஒரே காரில் கமல்-அரவிந்த் கெஜ்ரிவால்: பொதுக்கூட்ட மேடைக்கு புறப்பட்டனர்

  • IndiaGlitz, [Wednesday,February 21 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று காலை தனது அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தொடங்கிய நிலையில் இன்னும் சற்று நேரத்தில் மதுரை பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்கவுள்ளார்.

இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் அரசியல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுரைக்கு வருகை தந்துள்ளார். அவரை நேரில் வரவேற்ற கமல், அவருடன் சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்

பின்னர் தற்போது இருவரும் ஒரே காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இன்னும் சில நிமிடங்களில் கமல்ஹாசன் கட்சியின் முதல் பொதுக்கூட்டம் ஆரம்பிக்கவிருப்பதால் அதுகுறித்த உடனடி செய்திகளுக்காக இதே இடத்தில் காத்திருங்கள்

More News

கட்சி கொடியை ஏற்றினார் கமல்: கொடியின் நிறங்கள் என்ன தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் சற்றுமுன்னர் தனது அரசியல் கட்சியின் கொடியை ஏற்றினார்.

இயக்குனர் விஜய் -பிரபுதேவா படத்தின் டைட்டில் அறிவிப்பு

பிரபல இயக்குனர் விஜய், பிரபுதேவா, தமன்னா நடிப்பில் இயக்கிய 'தேவி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மீண்டும் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா ஒரு படத்தில் நடித்து வருகிறார்

அரசியலிலும் உங்கள் சாதனை தொடரட்டும்: கமலுக்கு பிரபல நடிகர் பாராட்டு

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். இன்று மாலை 6 மணிக்கு அவர் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிவிக்கின்றார்

ப்ரியாவாரியர் மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புருவ நடனம் மற்றும் கண் சிமிட்டல் மூலம் ஒருசில நாட்களில் இணைய உலகத்தின் உச்சகட்ட புகழை பெற்றுவிட்ட மலையாள நடிகை பிரியாவாரியருக்கு கண்திருஷ்டி போல் அவர் மீது ஒருசில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன,.

பேஸ்புக் மார்க் ஜுகர்பெர்கை பின்னுக்கு தள்ளிய பிரியாவாரியர்

கடந்த சில நாட்களாக இணையதளங்களின் வைரல் பிரியாவாரியர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது புருவ நடனமும் ஒரே ஒரு கண் சிமிட்டலும் லட்சக்கணக்கான இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தது.