கமல், அர்ஜுன் பட நடிகையை சுற்றி வளைத்து தாக்கிய பெண்கள்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!

  • IndiaGlitz, [Sunday,June 02 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’ஆளவந்தான்’ மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த ’சாது’ ஆகிய தமிழ் படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்த நடிகையை மும்பையில் பெண்கள் சுற்றி வளைத்து தாக்கிய சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டண்டன் தனது காரில் சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவரது காரை 3 பெண்களை மறித்து, அவருடைய கார் தங்கள் மீது இடித்து விட்டதாக கூறி உள்ளூர் வாசிகள் குற்றம் சாட்டி சண்டை போடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

ஒரு கட்டத்தில் ரவீனாவை பெண்கள் தாக்கும் நிலையில் ’தயவு செய்து என்னை அடிக்காதீர்கள், இங்கு ஒரு விபத்தும் நடைபெறவில்லை என ரவீனா அவர்களிடம் கெஞ்சும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன.

ரவீனாவின் கார் யார் மீது மோதவில்லை என்பது சிசிடிவி கட்சியின் மூலம் உறுதி செய்துள்ள நிலையில் பணம் பறிக்கும் நோக்கத்துடன் போதையில் இருந்த சில பெண்கள் அவரை வழிமறித்து தாக்கியதாக ரவீனா டண்டன் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்த சிசிடிவி காட்சிகளில் தெளிவாக ரவீனாவின் கார் யார் மீதும் இடிக்கவில்லை என்றும் அவரிடம் பணம் பிடுங்கவே இந்த நாடகத்தை நடத்தி உள்ளனர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து காவல்துறையினர் இந்த வழக்கில் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.