கமல், அர்ஜுன் பட நடிகையை சுற்றி வளைத்து தாக்கிய பெண்கள்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!

  • IndiaGlitz, [Sunday,June 02 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’ஆளவந்தான்’ மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த ’சாது’ ஆகிய தமிழ் படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்த நடிகையை மும்பையில் பெண்கள் சுற்றி வளைத்து தாக்கிய சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டண்டன் தனது காரில் சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவரது காரை 3 பெண்களை மறித்து, அவருடைய கார் தங்கள் மீது இடித்து விட்டதாக கூறி உள்ளூர் வாசிகள் குற்றம் சாட்டி சண்டை போடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

ஒரு கட்டத்தில் ரவீனாவை பெண்கள் தாக்கும் நிலையில் ’தயவு செய்து என்னை அடிக்காதீர்கள், இங்கு ஒரு விபத்தும் நடைபெறவில்லை என ரவீனா அவர்களிடம் கெஞ்சும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன.

ரவீனாவின் கார் யார் மீது மோதவில்லை என்பது சிசிடிவி கட்சியின் மூலம் உறுதி செய்துள்ள நிலையில் பணம் பறிக்கும் நோக்கத்துடன் போதையில் இருந்த சில பெண்கள் அவரை வழிமறித்து தாக்கியதாக ரவீனா டண்டன் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்த சிசிடிவி காட்சிகளில் தெளிவாக ரவீனாவின் கார் யார் மீதும் இடிக்கவில்லை என்றும் அவரிடம் பணம் பிடுங்கவே இந்த நாடகத்தை நடத்தி உள்ளனர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து காவல்துறையினர் இந்த வழக்கில் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

More News

'இந்தியன் 2' படத்தில் காஜல் அகர்வால் கிடையாதா? அவரது காட்சிகள் என்ன ஆச்சு?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான 'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீடு நேற்று பிரம்மாண்டமாக

தமிழ் நடிகரிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

சென்னை விமான நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

50 வயது நடிகையுடனான காதலை முறித்து கொண்டாரா 38 வயது நடிகர்? மாறி மாறி சர்ச்சை பதிவு..!

50 வயது நடிகை 38 வயது நடிகர் ஒருவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் இருவரும் மாறி மாறி தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவதை பார்க்கும்

நிறைவாக ஒரு புன்னகை.. 'எதிர்நீச்சல்' ஃபேமிலி போட்டோ.. முக்கியமான 2 பேர் மட்டும் காணவில்லை..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதை அடுத்து கடைசி நாள் படப்பிடிப்பில் 'எதிர்நீச்சல்' பேமிலி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்

காதலருடன் ப்ரியா பவானி சங்கர் சென்ற நகரம்.. இனி எனக்கு இரண்டாவது வீடு என அறிவிப்பு..!

தமிழ் திரை உலகில் பிஸியான நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் தனது காதலருடன் வெளிநாட்டு நகரம் ஒன்றுக்கு சென்றுள்ள நிலையில் அந்நகரத்தை தனது இரண்டாவது வீடு