வெற்றிகள் தொடரட்டும்: ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்!

  • IndiaGlitz, [Wednesday,December 12 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 69வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்களும் அரசியல தலைவர்களும் கோடிக்கணக்கான ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பல ஆண்டுகளாக ரஜினியின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கும் கமல்ஹாசன் சற்றுமுன் தனது சமூக வலைத்தளம் மூலம் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

'என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்' என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அதேபோல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என தமிழில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.