விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணியா? கமல் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுக, திமுக என இரண்டு கூட்டணியிலும் தேமுதிக எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் இன்னும் எந்த கூட்டணியில் இணைவது என்ற முடிவை தேமுதிக நிர்வாகிகள் எடுக்கவில்லை.
இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சியும், விஜயகாந்த் கட்சியும் கூட்டணி சேரும் என்றும், இந்த கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிப்பார் என்றும் இதுகுறித்து சமீபத்திய சந்திப்பில் விஜய்காந்துடன் ரஜினிகாந்த் ஆலோசித்ததாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவியது.
இதுகுறித்து விளக்கம் அளித்த கமல்ஹாசன், 'தேமுதிக கட்சியுடன் கூட்டணி குறித்துப் பேசவில்லை என்று கூறினார். மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களுக்கு, இன்று முதல் 5ஆம் தேதி வரை, விருப்பமனு வழங்கப்படும் என்றும், எங்களுடன் ஒத்த கருத்துடையவர்கள், மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், தகுதி உள்ளவர்கள், அவர்களுக்கு தெரிந்த தகுதி உள்ளவர்கள் போட்டியிட விருப்ப மனு கொடுக்கலாம்' என்றும் கமல் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com