விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணியா? கமல் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,February 25 2019]

அதிமுக, திமுக என இரண்டு கூட்டணியிலும் தேமுதிக எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் இன்னும் எந்த கூட்டணியில் இணைவது என்ற முடிவை தேமுதிக நிர்வாகிகள் எடுக்கவில்லை.

இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சியும், விஜயகாந்த் கட்சியும் கூட்டணி சேரும் என்றும், இந்த கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிப்பார் என்றும் இதுகுறித்து சமீபத்திய சந்திப்பில் விஜய்காந்துடன் ரஜினிகாந்த் ஆலோசித்ததாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவியது.

இதுகுறித்து விளக்கம் அளித்த கமல்ஹாசன், 'தேமுதிக கட்சியுடன் கூட்டணி குறித்துப் பேசவில்லை என்று கூறினார். மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களுக்கு, இன்று முதல் 5ஆம் தேதி வரை, விருப்பமனு வழங்கப்படும் என்றும், எங்களுடன் ஒத்த கருத்துடையவர்கள், மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், தகுதி உள்ளவர்கள், அவர்களுக்கு தெரிந்த தகுதி உள்ளவர்கள் போட்டியிட விருப்ப மனு கொடுக்கலாம்' என்றும் கமல் தெரிவித்தார்.
 

More News

ஆட்சியை பிடிப்பது எப்போது? புதிய கட்சி ஆரம்பித்துள்ள இயக்குனர் கவுதமன் பேட்டி!

தமிழ்நாட்டில் ஏற்கனவே நூற்றுக்கும் மேல் அரசியல் கட்சிகள் இருக்கும் நிலையில் தற்போது இயக்குனர் கவுதமன் 'தமிழ்ப் பேரரசு கட்சி' என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.

30 ஆண்டுகால பந்தம், பாசம் போய்விட்டதே! அன்புமணி வேதனை

7 மக்களவை தொகுதி ஒரு மாநிங்களவை தொகுதிக்காக பாமக தவறான முடிவெடுத்துவிட்டதாக மாற்று கட்சியினர் மட்டுமின்றி பாமகவில் இருக்கும் சிலரே தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

ஐஸ்வர்யாவின் புதிய முயற்சிக்கு வரவேற்பு அளித்த தனுஷ்-அனிருத்

திரையுலக பிரபலங்கள் அனைவருமே கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களிலும் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு பிரபலத்திற்கும் தற்போது வலைத்தளம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது

கமல் கட்சியில் இணைந்த பாமகவின் முக்கிய பிரமுகர்!

அதிமுக ஆட்சி மீதும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும், அமைச்சர்கள் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய பாட்டாளி மக்கள் கட்சி திடீரென கடந்த வாரம் அதிமுக கூட்டணியில் இணைந்து

எனக்கும் ஒரு நாள் ஆஸ்கார் கிடைக்கும்: விக்னேஷ் சிவன்

2019ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. கிரீன் புக்', 'ரோமா', 'பிளாக் பாந்தர் ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கார் விருதினை அள்ளின.