'கமல் 234' திரைப்படம் 'நாயகன்' இரண்டாம் பாகமா? விருது வழங்கும் விழாவில் செம அப்டேட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ’கமல் 234’ திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் மணிரத்னம் இயக்க இருக்கும் இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று விருது வழங்கும் விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார், அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட நிலையில் அந்த விருதை ஏஆர் ரகுமான் கமல்ஹாசனுக்கு வழங்கினார்
இந்த நிலையில் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், தனது 234 வது படம் குறித்து செம அப்டேட்டை கொடுத்துள்ளார்.
’கமல் 234’ படம் ’நாயகன்’ படம் போன்று தான் இருக்கும் என்றும் இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு எங்களை பதட்டமடைய செய்தாலும் நாங்கள் கூலாக இந்த படத்தின் பணியை செய்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
’கமல் 234’ திரைப்படம் நாயகன் போல் இருக்கும் என்று கமல் கூறியதை அடுத்து இந்த படம் நாயகன் இரண்டாம் பாகமாக இருக்கலாம் அல்லது கேங்ஸ்டர் ஜானரில் உள்ள படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com