'கமல் 234' படத்தின் நாயகி இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கமல் 234’ படத்தின் டைட்டில் இன்று வெளியாக இருப்பதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் துல்கர் சல்மான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது வந்த அறிவிப்பின்படி இந்த படத்தில் த்ரிஷா நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் ’கமல் 234’ படத்தில் இணைந்ததை உறுதி செய்துள்ளார்.
கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகிய இருவருடன் மீண்டும் இணைவதில் தனக்கு த்ரில்லாக இருக்கிறது என்றும் தனது கனவு நனவாகிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கமல்ஹாசனுடன் த்ரிஷா, ‘மன்மதன் அம்பு’ மற்றும் ‘தூங்காவனம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பதும் அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் த்ரிஷா, ‘பொன்னின் செல்வன்’ மற்றும் ‘பொன்னியின் செல்வன் 2’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்த படத்தில் த்ரிஷா இணைந்துள்ளது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Blessed when dreams come true multiple times🥹Thrilled to collaborate again with the legend powerhouses Mani sir & Kamal sir in #KH234. Thank you universe🙏🏻❤️🧿 pic.twitter.com/KSyJ4fskF9
— Trish (@trishtrashers) November 6, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments