தவறாக விமர்சனம் செய்துவிட்டேன். ராஜமெளலியிடம் மன்னிப்பு கேட்ட பாலிவுட் பிரபலம்

  • IndiaGlitz, [Tuesday,May 16 2017]

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் உலக அளவில் பெரும் ஆதரவை பெற்று ரூ.1500 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இந்த படத்தை பார்த்த கிட்டத்தட்ட அனைவருமே பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்திருந்த நிலையில் பாலிவுட் பிரபலம் கமால் ஆர்.கான் என்றா கே.ஆர்.கே மட்டும் இந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

'பாகுபலி' படம் தன்னை தென்னிந்திய படங்களை பார்க்கத் தூண்டியதாகவும், ஆனால் 'பாகுபலி 2' பார்த்த பிறகு இனி தென்னிந்திய படங்களை பார்ப்பது இல்லை என முடிவு செய்துள்ளதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து தனது தவறான விமர்சனத்திற்கு மன்னிப்பு கேட்பதாகவும், இந்த படம் தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் மக்களுக்கு பிடித்துள்ளதாகவும், ராஜமெளலி தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.