ஹேமந்த் கொன்னுருவாருன்னு சித்ரா பயந்திருக்கலாம்: பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது தற்கொலைக்கு காரணமானவர் அவரது கணவர் ஹேமந்த் ஆக இருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் சித்ராவின் தற்கொலை குறித்து ஏற்கனவே சக நடிகர் நடிகைகள் தங்களது கருத்தை தெரிவித்த நிலையில் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நடிகை கல்யாணி ரோகித் சில திடுக்கிடும் தகவல்களை கொடுத்துள்ளார்
மன அழுத்தம் என்பது எப்படி வரும்? என்பது யாருக்கும் தெரியாது. சில நிமிடங்களுக்கு முன் வரை சந்தோஷமாக இருப்பார்கள். ஆனால் திடீரென மன அழுத்தம் ஏற்பட்டு தவறான முடிவை எடுத்து விடுவார்கள். ஒருவரை நாம் மேலோட்டமாக பார்க்கும்போது அவர் மன அழுத்தத்தில் இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கவே முடியாது, அவராகவே மனம் திறந்து கூறினால் தான் தெரியும்’ என்று கூறினார்.
மேலும் சித்ராவுக்கு அனைத்தும் இருந்தது, அவர் சந்தோஷமாக தான் இருந்தார், அவர் மிகவும் தைரியமானவர், எனவே அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை என்று சிலர் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தற்கொலை என்பது ஒரு சில நொடிகளுக்கு முன் வருவது, அந்த நொடியே அவர்கள் கடந்துவிட்டால் தப்பித்து விடுவார்கள் இல்லை என்றால் தவறான முடிவு தான் ஏற்படும்.
சித்ராவுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு என்ன வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். ஒருவேளை ஹேமந்த் தன்னை கொன்று விடுவாரோ என்ற பயம் கூட காரணமாக இருக்கலாம், யார் கண்டது? என்று கல்யாணி ரோஹித் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments