முதல் படமே ரிலீஸ் ஆகவில்லை, அதற்குள் சூப்பர் ஸ்டார் மகனுடன் காதலா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல மலையாள மற்றும் தமிழ் பட இயக்குனர் பிரியதர்ஷன் அவர்களின் மகள் கல்யாணி பிரியதர்ஷன், தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’ஹீரோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு கோலிவுட் திரையுலகம் உள்பட தென்னிந்திய திரையுலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திடீரென அவர் காதலில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மகன் பிரணவ் மீது அவர் காதல் கொண்டிருப்பதாகவும் இந்த காதல் அவரது குடும்பத்தினருக்கும் தெரியும் என்றும் கூறப்படுகிறது.
கல்யாணி பிரியதர்ஷன் ஏற்கனவே தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் இன்னும் அவருக்கு ஒரு படம்கூட வெளியாகவில்லை. இந்த நிலையில் காதலில் விழுந்தால் அவரது திரையுலக எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் காதல் என்பது அவரது தனிப்பட்ட விஷயம் அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று அவரது தரப்பினர் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இந்த காதல் குறித்து அவர் தெளிவான ஒரு விளக்கத்தை அளித்தால் தேவையில்லாத கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout