கொரோனாவுக்கு பலியான இன்னொரு தமிழ் நடிகர்: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு பலியாகி வரும் திரையுலக பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் இயக்குநர்கள் தாமிரா மற்றும் கேவி ஆனந்த் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பழம்பெரும் நடிகர் திலக் கொரோனாவால் உயிரிழந்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’கல்தூண்’. இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தவர் என்பதால் இவரது பெயர் கல்தூண் திலக் என்று மாறிவிட்டது. மேலும் இவர் ’ஆறிலிருந்து அறுபது வரை’ ’பேர் சொல்ல ஒரு பிள்ளை’ ’தாயில்லாக் குழந்தை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் மட்டுமின்றி இவர் சில படங்களில் உதவி படத்தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்தூண் திலக் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து அவருடைய மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

இது ஆரம்பம் இன்னும் நிறைய காத்திருக்கு: 'குக் வித் கோமாளி' அஸ்வினுக்கு 'பிகில் நடிகை வாழ்த்து

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் 'குக் வித் கோமாளி

வெண்டிலேட்டர் பற்றாக்குறை: பிரபல பாடகர் பரிதாப பலி!  

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பாடகர் ஒருவர் வென்டிலேட்டர் பற்றாக்குறை காரணமாக பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

வெள்ளந்தி சிரிப்பு இன்றும் என் கண் முன்னே நிற்கிறது: 'பருத்திவீரன்' நடிகை மறைவுக்கு கார்த்தி டுவிட்

கார்த்தி, பிரியாமணி நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பருத்தி வீரன். இந்த  திரைப்படத்தில் கார்த்தியின் 'அப்பத்தா'வாக நடித்த நடிகை பஞ்சவர்ணம் உடல்நலக்குறைவால் காலமானார் 

பெல்ஜியத்தை  சேர்ந்த இளம்பெண் நண்பர்களால் சுட்டுக்கொலை...!

பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த, பிரிட்டிஷ்-பெல்ஜிய இளம்பெண் அவளுடைய 2 ஆண் நண்பர்களால் லாகூரில் சுட்டுக் கொல்லப்பட்டார்

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளர்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி முடிவு!

தமிழக முதல்வராக இன்று முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டார் என்பதும் அவரை தொடர்ந்து 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் தெரிந்ததே