இதை மட்டும் செய்யாதீங்க: ரிலீசுக்கு முன் 'கல்கி' குழுவினர் வெளியிட்ட உருக்கமான வேண்டுகோள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ள நிலையில் வெளிநாடுகளில் இந்த படத்தை பார்த்தவர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள் என்றும் எனவே பிரபாஸுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் அதிகாலை காட்சியை திற மாநிலங்களில் வெளியாகியுள்ள நிலையில் நேற்று இரவு வெளிநாடுகளிலும் இந்த படம் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’கல்கி 2898 ஏடி’ படத்தின் ரிலீஸ்க்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு படக்குழுவினர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு தயவுசெய்து இதை மட்டும் செய்ய வேண்டாம் என்று பார்வையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அந்த வேண்டுகோளில் இந்த படத்தை நான்கு ஆண்டுகள் இயக்குனர் நாக் அஸ்வின் மற்றும் அவரது குழுவினர் தங்களது கடின உழைப்பின் மூலம் உருவாக்கியுள்ளனர் என்றும் இந்த படத்தின் குழுவினர் தங்கள் ரத்தத்தை சிந்தி இந்த படத்தை உருவாக்கி உள்ளனர் என்றும் எனவே இந்த படம் திரையரங்கில் தற்போது வெளியாகியுள்ள நிலையில் தயவு செய்து யாரும் திருட்டு இணையதளங்கள் மூலம் இந்த படத்தை பார்க்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வேண்டுகோள் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments