close
Choose your channels

'கல்கி' 2ஆம் பாகம் வெளியாக இத்தனை வருடங்கள் ஆகுமா? ரசிகர்கள் அதிருப்தி..!

Friday, August 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்த ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாகவும் முதல் பாகத்தில் ஒரு சில நிமிடங்களே வந்த கமல்ஹாசன் கேரக்டர் இரண்டாம் பாகத்தில் அதிக அளவு இருக்கும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து கமல்ஹாசன் ரசிகர்கள் ’கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ’கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2025 ஆம் ஆண்டு தான் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள், கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் முடிவடைய மூன்றாண்டு காலம் ஆகும் என்றும் கூறப்படுகிறது. எனவே ’கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகம் 2028ஆம் ஆண்டு தான் வெளியாகும் என்று கூறப்படுவதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆனால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் பல மடங்கு ஆச்சரியங்கள் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது என்று தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment