சமயம் வந்துவிட்டது.. இறைவனின் உயிர் தங்கள் கருவில் உள்ளது: 'கல்கி 2898 ஏடி' டிரைலர்..!

  • IndiaGlitz, [Saturday,June 22 2024]

பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி’ திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ரிலீசுக்கு 5 நாட்களுக்கு முன்பு வெளியாகி உள்ள மிரட்டல் டிரைலர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’சமயம் வந்துவிட்டது அந்த இறைவனின் உயிர் உங்கள் கருவில் உள்ளது’ என்று தீபிகா படுகோனை பார்த்து அமிதாப்பச்சன் பேசும் வசனத்துடன் இந்த ட்ரைலர் ஆரம்பமாகிறது. மேலும் பிரபாஸ் மற்றும் அமிதாப்பச்சன் மோதும் காட்சிகள், மிரட்டலான மேக்கப் உடன் இருக்கும் கமல்ஹாசனின் காட்சிகள், தீபிகா படுகோனின் ஆக்ரோஷமான ஆக்சன் காட்சிகள், திஷா பதானியின் விறுவிறுப்பான காட்சிகள் என இந்த இரண்டு நிமிட ட்ரெய்லரில் ஒவ்வொரு காட்சியும் இந்திய சினிமா ரசிகர்கள் எதிர்பாராத காட்சிகளாக இருப்பதால் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று காலகட்டத்தில் நடப்பதாக இந்த படத்தின் கதை அமைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றவாறு செட் மற்றும் கிராபிக்ஸ் பணிகளை படக்குழுவினர் செய்துள்ளனர் என்பதும் குறிப்பாக கிராபிக்ஸ் கலைஞர்களின் கடுமையான உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது என்றும் இந்த டிரைலர் வீடியோவுக்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய திரை உலகில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து ஒரே படத்தில் நடித்துள்ளதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இயக்குனர் நாக் அஸ்வின் நிச்சயம் அனைத்து நட்சத்திரங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களை கொடுத்து இருப்பார் என்றும் இந்த படம் இந்திய சினிமாவில் ஒரு புதிய சகாப்தம் என்ற பெயரை எடுக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஓபனிங் வசூல் மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.