close
Choose your channels

'கல்கி 2898 ஏடி' படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவா? ரசிகர்கள் பொறுமை காப்பார்களா?

Wednesday, June 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ படம் வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தில் கமல்ஹாசன் வில்லன் ஆகவும் வேறு சில முக்கிய கேரக்டர்களில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கல்கி அவதார இதிகாச புராணங்களை அடிப்படையாகக் கொண்டும், அதில் தற்காலிக விஞ்ஞானத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் அதாவது 178 நிமிடங்கள் என்றும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த படத்தின் ரன்னிங் டைம் உள்ள நிலையில் அவ்வளவு நேரம் ரசிகர்களை திரையரங்கில் கட்டி போடும் அளவுக்கு சுவாரசியமான காட்சிகள் இந்த படத்தில் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.