'கல்கி 2898 ஏடி' முதல் நாள் வசூல் 180 கோடி இல்லை.. அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபாஸ் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் நேற்று பிரமாண்டமாக வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் வசூல் குறித்த தகவல்கள் இன்று காலை முதல் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகிய நிலையில் தயாரிப்பு நிறுவனமே தற்போது அதிகாரபூர்வமாக முதல் நாள் வசூல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார் என்பதும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த படம் சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது என்பது தெரிந்தது.
இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்தியா முழுவதும் படக்குழுவினர் ப்ரோமோஷன் செய்தனர் என்பதும் இந்த படத்தின் முன்பதிவு வசூல் சாதனை செய்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று காலை சமூக வலைதளங்களில் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் முதல் நாள் வசூல் 180 கோடி ரூபாய் என்றும் அதில் இந்தியாவில் மட்டும் 95 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் 191.5 கோடி ரூபாய் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் நாளில் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ள இந்த படம் வார இறுதிக்குள் 500 கோடி ரூபாயை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
𝐋𝐞𝐭’𝐬 𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐞 𝐂𝐢𝐧𝐞𝐦𝐚…❤️🔥#Kalki2898AD #EpicBlockbusterKalki @SrBachchan @ikamalhaasan #Prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD @saregamaglobal @saregamasouth pic.twitter.com/Xqn7atEWNF
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) June 28, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments