close
Choose your channels

தவிடுபொடியான வதந்திகள்.. 'கல்கி 2898 ஏடி' படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா?  அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Saturday, June 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபாஸ், கமல்ஹாசன் உள்பட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது என்பதும் உலகம் முழுவதும் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமான வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்தது என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

மேலும் முதல் நாளில் இந்த படம் 191.50 கோடி ரூபாய் வசூல் ஆனதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் இரண்டாவது நாள் வசூல் மிகவும் குறைந்து விட்டதாகவும் வெறும் 50 கோடி மட்டுமே வசூல் செய்ததாகவும் வதந்திகள் வெளியாகின.

ஆனால் அந்த வதந்திகளை எல்லாம் அடித்து நொறுக்கியபடி இரண்டாவது நாளிலும் இந்த படம் மிகப்பெரிய வசூலை செய்துள்ளதாகவும் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் சேர்த்து உலகம் முழுவதும் இந்த படம் 298.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் வசூல் செய்து விட்ட நிலையில் இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இந்த இரண்டு நாட்களிலும் 300 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 600 கோடி ரூபாய் என்ற நிலையில் 4 நாட்களில் 600 கோடி ரூபாய் வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment