தவிடுபொடியான வதந்திகள்.. 'கல்கி 2898 ஏடி' படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா?  அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,June 29 2024]

பிரபாஸ், கமல்ஹாசன் உள்பட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது என்பதும் உலகம் முழுவதும் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமான வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்தது என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

மேலும் முதல் நாளில் இந்த படம் 191.50 கோடி ரூபாய் வசூல் ஆனதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் இரண்டாவது நாள் வசூல் மிகவும் குறைந்து விட்டதாகவும் வெறும் 50 கோடி மட்டுமே வசூல் செய்ததாகவும் வதந்திகள் வெளியாகின.

ஆனால் அந்த வதந்திகளை எல்லாம் அடித்து நொறுக்கியபடி இரண்டாவது நாளிலும் இந்த படம் மிகப்பெரிய வசூலை செய்துள்ளதாகவும் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் சேர்த்து உலகம் முழுவதும் இந்த படம் 298.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் வசூல் செய்து விட்ட நிலையில் இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இந்த இரண்டு நாட்களிலும் 300 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 600 கோடி ரூபாய் என்ற நிலையில் 4 நாட்களில் 600 கோடி ரூபாய் வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சன் டிவியின் 'மலர்' சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை.. விஜய் டிவி சீரியல் நடிகை இணைகிறாரா?

சன் டிவியில் 'மலர்' என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நடிகை திடீரென அந்த சீரியலில் இருந்து விலகுவதாகவும் அவருக்கு பதிலாக விஜய் டிவி சீரியல் நடிகை அந்த சீரியலில் இணைய இருப்பதாகவும் தகவல்

கவின் ஜோடியாக நடிப்பது அனுஷ்கா ஷர்மா உறவினரா? 'மாஸ்க்' படத்தின் மாஸ் தகவல்..!

நடிகர் கவின் நடிப்பில், வெற்றிமாறன் தயாரிப்பில், 'மாஸ்க்' என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா நடிக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது.

சினேகா - பிரசன்னாவை ஆச்சரியப்படுத்திய 'சின்ன சின்ன கண்கள்' பாடல்..! அப்படி என்ன நடந்தது?

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள 'கோட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதை தெரிந்தது.

ஒருவழியாக வந்துவிட்டது 'விடாமுயற்சி' அப்டேட்.. இன்ப அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்..!

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான்

காதல் கணவரை விவாகரத்து செய்த பாவனா.

தமிழில் அவர் நடித்த அசல்,தீபாவளி,சித்திரம் பேசுதடி திரைப்படம் மக்களால் கவரப்பட்டது.இவர் நடிக்க ஆரம்பித்து இவர் சந்தித்த விமர்சனங்கள் மற்றும் துன்பங்கள் ஏராளம்...