மூன்றாவது நாளிலும் செஞ்சுரி அடித்த 'கல்கி 2898 ஏடி'.. மொத்த வசூல் எவ்வளவு?

  • IndiaGlitz, [Sunday,June 30 2024]

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன் நடிப்பில் உருவான ‘கல்கி 2898 ஏடி’திரைப்படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான நிலையில் இந்த படம் முதல் நாளே 191.50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இதனை அடுத்து இரண்டு நாள் வசூல் 298.50 கோடி ரூபாய் என படக்குழுவினர்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் என்பதும் இதனை அடுத்து இரண்டே நாளில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் இந்த படம் வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நேற்று அதாவது மூன்றாவது நாள் குறித்த வசூல் தெரிய வந்துள்ள நிலையில் மூன்றாவது நாளில் மட்டும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. இதே போல் இன்றும் வசூல் செய்தால் நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வசூல் நெருங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்கி படத்தின் மொத்த பட்ஜெட் 600 கோடி ரூபாய் என்று கூறப்படும் நிலையில் 4 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் செய்து விடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியாக உள்ளனர்.

பிரபாஸ் படத்தின் இந்த வெற்றி அவரது அடுத்த அடுத்த படங்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என்பதும் குறிப்பாக ’கண்ணப்பா’ உள்ளிட்ட சில படங்கள் அவருக்கு மிகவும் பிரம்மாண்டமாக அமைய உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

விஜயாவுக்கு ஆப்பு வைத்த மனோஜ்..! 'சிறகடிக்க ஆசை' 2 மணி நேர எபிசோடில் இவ்வளவு நடந்துருக்கா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் தினந்தோறும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று இரண்டு மணி நேரம் எபிசோடு

பிரே பண்ணினேன் கடவுளுக்கு கேட்கல, கம்ப்ளைன்ட் பண்ணினேன் போலீஸ் கண்டுக்கல்ல.. 'மழை பிடிக்காத மனிதன்' டிரைலர்..!

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல்

'தங்கலான்' ரிலீஸ் தேதி இதுதான்.. இனி அடுத்தடுத்து பல அப்டேட்டுகள்: சூப்பர் அறிவிப்பு..!

விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'தங்கலான்' திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகி சில மாதங்கள் ஆன நிலையில் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

மீண்டும் இணையும் 'பார்க்கிங்' கூட்டணி.. ஹரிஷ் கல்யாண் அடுத்த பட அறிவிப்பு..!

ஹரிஷ் கல்யாண் நடித்த 'பார்க்கிங்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் அதே தயாரிப்பு நிறுவனத்துடன்

இந்திரஜா - கார்த்திக் மட்டுமல்ல.. இன்னும் சில பிரபலங்கள்.. Mr and Mrs சின்னத்திரை' போட்டியாளர்கள் முழு லிஸ்ட்..!

விஜய் டிவியில் 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சி இன்று முதல் ஆரம்பமாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே சமீபத்தில் திருமணம் ஆன இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் அவரது