4 நாட்களில் 'கல்கி 2898 ஏடி' படத்தின் பிரமாண்டமான வசூல்.. ரூ.1000 கோடியை நெருங்கிவிடுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியான நிலையில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில் வசூல் செய்த தொகை குறித்து அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தொகை திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நாயகனாகவும், கமல்ஹாசன் வில்லன் ஆகவும், மேலும் முக்கிய வேடங்களில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படம் பிரமாண்டமாக கடந்த வியாழன் அன்று வெளியானது என்பதும் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியான நிலையில் ஆரம்ப முதலே இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 200 கோடி வசூல் செய்த நிலையில் ஒவ்வொரு நாளும் 100 கோடி அளவில் வசூல் செய்து வருகிறது என்றும் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நான்கு நாட்களிலும் சேர்ந்து இந்த படம் 555 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இன்னும் ஒரு வாரம் இதே மாதிரி இந்த படம் வசூல் செய்தால் ரூ.1000 கோடியை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ’ஜவான்’ உள்பட ஒரு சில திரைப்படங்கள் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ள நிலையில் ரூ.1000 கோடி வசூல் பட்டியலில் ‘கல்கி 2898 ஏடி’ படம் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
555 CRORES & counting…💥
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) July 1, 2024
The BIGGEST FORCES are dominating the GLOBAL BOX OFFICE, show no signs of slowing down ⚡️#Kalki2898AD #EpicBlockbusterKalki@SrBachchan @ikamalhaasan #Prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD… pic.twitter.com/yoIe3yiLRr
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments