லியோ, ஜவானை முந்திய 'கல்கி 2898 ஏடி' முதல் நாள் வசூல்., உலகம் முழுவதும் எத்தனை கோடி?

  • IndiaGlitz, [Friday,June 28 2024]

பிரபாஸ் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான நிலையில் இந்த படத்திற்கு பெரும்பாலான விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில் முதல் நாளில் இந்த படம் அபார வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று ஒரே நாளில் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் உலகம் முழுவதும் 180 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், அதில் இந்தியாவில் மட்டும் 95 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே முன்பதிவில் மாஸ் காட்டிய இந்த படம் முதல் நாளில் கிட்டத்தட்ட 200 கோடியை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏற்கனவே முதல் நாளில் அதிக வசூல் செய்த செய்து சாதனை செய்த ’கேஜிஎப் 2’, ’சலார்’ ’ஜவான்’ ஆகிய திரைப்படங்களின் வசூலை ‘கல்கி 2898 ஏடி’திரைப்படம் முந்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ’கேஜிஎப் 2’ முதல் நாளில் ரூ.159 கோடியும், ’சலார்’ முதல் நாளில் ரூ.158 கோடியும், ‘லியோ’ முதல் நாளில் ரூ.142 கோடியும், ‘ஜவான்’ முதல் நாளில் ரூ.129 கோடியும் வசூல் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் ரூ.223 கோடி முதல் நாளில் வசூல் செய்து எஸ்எஸ் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் இன்னும் முதலிடத்தில் தான் உள்ளது என்பதும் அதேபோல் 217 கோடி ரூபாய் முதல் நாளில் வசூல் செய்து ’பாகுபலி 2’ திரைப்படம் இன்னும் இரண்டாவது இடத்தில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ‘கல்கி 2898 ஏடி’படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் இன்று மற்றும் சனி ,ஞாயிறு விடுமுறையில் நல்ல வசூல் செய்யும் என்றும் இந்த நான்கு நாட்களில் மட்டும் 500 கோடி ரூபாய் வசூலை நெருங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது