'ராயன்' ஃபேமிலி கேரக்டர்கள் இவர்கள் தான்.. ரகசியத்தை உடைத்த நடிகர்..!
- IndiaGlitz, [Friday,June 28 2024]
தனுஷ் நடித்து முடித்துள்ள அவரது 50வது திரைப்படமான ‘ராயன்’ படத்தை அவரே இயக்கி உள்ளார் என்ற நிலையில் இந்த படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் தற்போது வெறும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . நேற்று கூட சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தின் ஒரு புதிய ஸ்டில்லை வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் காளிதாஸ் ஜெயராம் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘ராயன்’ குடும்பத்தில் உள்ள கேரக்டர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். தனுஷ் மூத்த அண்ணனாக இந்த படத்தில் நடித்திருக்கிறார், சந்திப் கிஷான் இரண்டாவது அண்ணன், நான் மூன்றாவது ஆகவும், எங்கள் மூவருக்கும் தங்கையாக துஷாரா விஜயன் நடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன் ஆகியோர் நடித்திருக்கும் நிலையில் அவர்கள் என்ன கேரக்டரில் நடித்திருப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் அபர்ணா பாலமுரளி ஏற்கனவே சந்திப் கிஷான் ஜோடியாக நடித்திருப்பதாக உறுதி செய்யப்பட்ட நிலையில் தனுஷுக்கு ஜோடியாக யார் நடித்திருப்பார் என்ற கேள்வி எழுகிறது.
மேலும் இந்த படத்தில் வரலட்சுமி, அனிகா சுரேந்திரன், ஜெயராம், அறந்தாங்கி நிஷா, சரவணன் உள்பட ஒரு சிலர் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் , ஏஆர் ரகுமான் இசையில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.