மிஸ் தமிழ்நாடு டைட்டில் வின்னருடன் டேட்டிங்? காளிதாஸ் ஜெயராம் பகிர்ந்த புகைப்படம்!

மிஸ் தமிழ்நாடு டைட்டில் வின்னர் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் இருவரும் டேட்டிங் செய்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படத்தில் கமல் மகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’நட்சத்திரங்கள் நகர்கிறது’ என்ற படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் காளிதாஸ் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பெண்ணின் பெயர் தாரணி காளிங்கராயர் என்றும் இவர் 2019ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு டைட்டில் வின்னர் என்றும் கூறப்படுகிரது.

இதனை அடுத்து தமிழ்நாடு மிஸ் டைட்டில் வின்னருடன் நடிகர் காளிதாஸ் ஜெயராம் டேட்டிங்கில் இருப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.