ஆழமான, தரமான, நுணுக்கமான, வேலை செய்த மகிழ்ச்சி: காளி வெங்கட் டுவிட்

தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான காளி வெங்கட் தனது டுவிட்டர் பக்கத்தில் நிறைவு, ஆழமான, தரமான, நுணுக்கமான, வேலை செய்த மகிழ்ச்சி, நன்றி இயக்குனர் பா ரஞ்சித் என தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’சார்பாட்டா பரம்பரை’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள காளி வெங்கட் இன்று தனது டப்பிங் பணியை முடித்து உள்ளார். இதனை அடுத்து தனது டுவிட்டரில் ’நிறைவு, ஆழமான ,தரமான, நுணுக்கமான, வேலை செய்த மகிழ்ச்சி, நன்றி இயக்குனர் பா.ரஞ்சித்’ என தெரிவித்துள்ளார். மேலும் டப்பிங் செய்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா, காளி வெங்கட், ஜான் விஜய், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முரளி ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பதும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான நில அதிர்வு!

திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளான கூடன்குளம், கூட்டப்புளி, ராதாபுரம்,

வரலாற்று ஆசிரியர்களே முகம் சுளிக்கும் அரசன் காலிகுலா கதை… ஆடியோ வடிவில்!

ஜுலியஸ் சீசரின் அடையாளமாகப் பெயர்ப்பெற்ற ரோம மன்னன் ஒருவரை வரலாற்று ஆசிரியர்கள் பலரும் காலிகுலா என்றே அழைக்கின்றனர்.

வீட்டில் இருந்தபடியே கொரோனா இருப்பதைக் கண்டுபிடிக்க முடியுமா? விளக்கும் வீடியோ!

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தற்போது இந்தியா முழுக்கவே பீதியை ஏற்படுத்தி வருகிறது

தீவிரவாத செயலை தூண்டுகிறார்: நடிகர் சித்தார்த்தை கைது செய்ய புகார்!

சமீபத்தில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தங்களுடைய மாநிலத்தில் ஆக்சிஜன் இல்லை என்று யாராவது வதந்தியை கிளப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

மே 1,2-இல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா...? 

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு குறித்து தலைமை  தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளார்.