என்ன திருப்பி குடுக்கறதுனு தெரியல: காளிவெங்கட்டின் ஆனந்தக்கண்ணீர்

  • IndiaGlitz, [Friday,October 20 2017]

தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படத்தில் விஜய்யை அடுத்து அனைவரையும் கவர்ந்த ஒரு கேரக்டர் ஆட்டோ டிரைவராக நடித்த காளி வெங்கட் கேரக்டர்தான். பதினைந்து நிமிடங்களே படத்தில் வந்தாலும் உருக வைக்கும் காட்சிகள் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

மகளிடம் பாசத்தை காண்பிக்கும் காட்சியிலும், விபத்துக்குள்ளாகி துடிக்கும் மகளை கண்டு கதறுவதும் டாக்டரிடம் பரிதாபமாக ஏமாறுவதும் என காளி வெங்கட் கொடுத்த வாய்ப்பை மிக நன்றாக பயன்படுத்தியுள்ளார். காளிவெங்கட்டின் நடிப்புக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த படத்தை நெகட்டிவ் விமர்சனம் செய்த ஒருசில ஊடகங்கள் கூட காளிவெங்கட் காட்சிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் ரசிகர்கள் காட்டும் அன்புக்கு என்னால் என்ன திருப்பி கொடுப்பது என்றே தெரியவில்லை என்று மனமுருகி காளிவெங்கட் தனது டுவிட்டரில் ஆனந்தக்கண்ணீருடன் தனது நன்றியை பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ' உங்க அன்புக்கும் பாராட்டுக்கும் என்ன திருப்பி குடுக்கறதுனு தெரியல, அனைவருக்கும் நன்றி' என்று தெரிவித்துள்ளார். ஒரு நல்ல கலைஞனுக்கு இதைவிட வேறு பெருமை வேண்டுமா?

More News

முதல்முறையாக வெளியான தளபதியின் தபால்தலை

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு ஒருசில கலவையான விமர்சனங்கள் வெளிவந்தபோதிலும் பெருவாரியான ஊடகங்கள், சமூகவலைத்தள பயனாளிகள் அளித்த பாசிட்டிவ் விமர்சனங்கள்

பிரமாண்டமாக நடைபெறும் '2.0' இசை வெளியீட்டு விழா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி துபாயில் பிரமாண்டமாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருகிறது. 

நிஜமாகவே நடந்த 'மெர்சல்' மருத்துவமனை காட்சி: அதிர்ச்சி தகவல்

நேற்று வெளியான தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் ஒரு காட்சியில் ஆட்டோ டிரைவரான காளிவெங்கட்டின் மகள் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார்.

நிலவேம்பு குடிநீர்: கமல்ஹாசன் சற்றுமுன் அளித்த புதிய விளக்கம்

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஒரு ஆண்டுக்கு பின்னர் முரசொலி அலுவலகம் வந்தார் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக முதுமை காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். சமீபத்தில் நடந்த முரசொலி பவள விழாவிற்கு கூட அவர் வரவில்லை.