விமலுக்கு திருப்புமுனை ஏற்படுத்துவரா ஓவியா?

  • IndiaGlitz, [Thursday,August 31 2017]

நடிகர் விமல் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் திரையுலகினர் அவருக்கு வாழ்த்து கூறினர். இந்த நிலையில் விமல் தனது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள இரண்டு படங்கள் குறித்த தகவலை கூறியுள்ளார். ஒன்று 'வெற்றிவேல்' பட இயக்குனர் இயக்கத்தில் ஒரு படம். இன்னொன்று விமலின் திரையுலக வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய 'களவாணி' படத்தின் இரண்டாம் பாகம்.

விமல்-ஓவியா ஜோடியாக நடித்த சற்குணம் இயக்கிய 'களவாணி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் இதே ஜோடி இணையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓவியா இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டால் இந்த படத்தின் வெற்றியையும் சேர்த்து உறுதி செய்துவிடலாம். ஏனெனில் இன்றைய நிலையில் ஓவியாவுக்கும் புகழ் படத்தை மிக எளிதில் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுவிடும்.

தற்போது விமல் தனது சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'மன்னார் வகையறா' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.