அரசியல்ல களவாணித்தனம் தான் கைகொடுக்கும்: 'களவாணி 2' டிரைலர் விமர்சனம்

  • IndiaGlitz, [Sunday,April 14 2019]

விமல், ஓவியா நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கிய 'களவாணி' திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் அதே விமல், ஓவியா நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

16 வருசம் உண்ணாவிரதம் இருந்த ஐரோம் ஷர்மிளாவுக்கே 700 ஓட்டு மட்டுமே போட்ட நாடு நம்ம நாடு, அரசியல்ல நல்லவங்களுக்கு காலமே இல்லடா மாப்பிள்ளை, களவாணித்தனம் தான் கைகொடுக்கும் என்ற விமலின் வசனத்துடன் ஆரம்பமாகிறது இந்த படத்தின் டிரைலர்.

எம்.பி, எம்.எல்.ஏ தேர்தலை விட உள்ளாட்சி தேர்தல் நடக்கும்போது கிராமப்புறங்களில் பெரிய திருவிழா போன்று இருக்கும். ஆட்டம், பாட்டம், கறிச்சோறு என ஒரு கிராமத்தில் நடக்கும் தேர்தல் திருவிழாவை இயக்குனர் அப்படியே இந்த படத்தில் கண்முன் கொண்டுவந்துள்ளது இந்த டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

அதேபோல் 'அரசியல்ல எப்பவுமே மூணு எழுத்துதான் ராசி, ஆந்திராவுக்கு ஒரு என்.டி.ஆர், தமிழ்நாட்டுக்கு ஒரு எம்.ஜி.ஆர், இன்னிலயிருந்து உம் பேரு ஏ.எம்.ஆர்' என்ற ஓவியாவின் வசனத்தை பார்த்து இன்னும் எத்தனை பேர் தங்களுடைய பெயரை மாற்றப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

விக்னேஷ்காந்த், கஞ்சாகருப்பு, சரண்யா காமெடி படத்தில் சுவாரஸ்யமாக இருக்கும்போல் தெரிகிறது. மொத்தத்தில் தேர்தல் நேரத்தில் ஒரு அரசியல் காமெடி படம் தயாராகியுள்ளது என்பது இந்த படத்தின் டிரைலரில் இருந்து தெரிகிறது.
 

More News

தேர்தல் அதிகாரி டுவீட்டை மேற்கோள் காட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'சர்கார்' திரைப்படம் வெளியானவுடன் தான் 49P என்பதே பொதுமக்களில் பலருக்கு தெரிய வந்தது.

துரைமுருகனை அடுத்து வசந்தகுமார்: வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு!

திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் நிலையில் சமீபத்தில் துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்களில்

கார்த்தி-ஜோதிகா நடிக்கும் படத்தின் முக்கிய தகவல்

நடிகர் கார்த்தியும் அவருடைய அண்ணி ஜோதிகாவும் ஒரே படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர் என்பதையும் இந்த படத்தை 'த்ரிஷ்யம்' பட இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

ரிலீஸ் தேதி குறித்து 'கடாரம் கொண்டான்' படக்குழுவினர் விளக்கம்

விக்ரம், ஸ்ருதிஹாசன் நடிப்பில் எம்.ராஜேஷ் செல்வா இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான 'கடாரம் கொண்டான்' திரைப்படம் வரும் மே 31ஆம் தேதி வெளியாகும்

தேர்தல் பிரச்சார களத்தில் விஜயகாந்த்! தொண்டர்கள் உற்சாகம்

அதிமுக கூட்டணியில் ஒருசில சர்ச்சைகளுக்கு பின் இணைந்த தேமுதிக, அக்கூட்டணியிடம் கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர், வடசென்னை ஆகிய நான்கு தொகுதிகளை பெற்றது.