தேர்தல் கமிஷனுக்கு திரையுலகம் விடுத்த வேண்டுகோள்

  • IndiaGlitz, [Wednesday,March 09 2016]

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி வரும் மே மாதம் 16ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடைமுறைகள் விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அரசின் சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு நிறுத்தப்பட்ட சலுகைகளில் ஒன்று 'யூ' சர்டிபிகேட் பெற்ற திரைப்படங்களுக்கு கொடுக்கப்படும் வரிவிலக்கு சலுகை நிறுத்தம்.


'யூ' சர்டிபிகேட் பெற்ற திரைப்படங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் 30% வரிச்சலுகை என்பது தயாரிப்பாளர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய சலுகை. மே மாதம் 16ஆம் தேதி தேர்தல் முடிந்து 19ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டவுடன் தான் தேர்தல் நடைமுறை விதிகள் முடிவுக்கு வரும்,

எனவே கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை கிடைக்காத நிலை இருப்பதால் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

'யூ' சர்டிபிகேட் பெற்ற படங்களுக்கு தமிழக அரசு அளிக்கும் வரிச்சலுகையை நிறுத்த வேண்டாம் என்றும் இதனால் பல தயாரிப்பாளர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவருடைய வேண்டுகோளை தேர்தல் கமிஷன் ஏற்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அஜித்தின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

தல அஜித் நடித்த 'வேதாளம் வெற்றிப்படத்தை அடுத்து அவருடைய அடுத்த படம் எப்போது தொடங்கும் என ஆவலுடன்...

'தெறி'யின் முதல்கட்ட டிராக் லிஸ்ட்

இளையதளபதி விஜய்யின் 'தெறி' படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் உள்ளது என்பதை சற்று முன்னர் பார்த்தோம்...

இந்திய திரையுலகில் இதுவரை யாரும் தொடாத சப்ஜெக்ட்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த் 'ரஜினிமுருகன்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய...

விஜய்யின் 'தெறி' பாடல்கள் குறித்த முக்கிய தகவல்கள்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் இசை வெளியீடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

'இறுதிச்சுற்று' கதையை திடீரென மாற்றிய இயக்குனர்.

மாதவன், ரித்திகாசிங் நடிப்பில் சுதா இயக்கத்தில் சமீபத்தில் தமிழ், மற்றும் இந்தியில் வெளியான 'இறுதிச்சுற்று' திரைப்படம் இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட்...