'இதுமாதிரி உங்களுக்கு  நடந்தா சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுங்கள்: கலாநிதி மாறன்

  • IndiaGlitz, [Saturday,July 29 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் இந்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பேசிய போது ரஜினிக்கு நடந்தது போல் உங்களுக்கும் நடந்தால் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுங்கள் என்று தெரிவித்தார்.

’ஜெயிலர்’ ஆடியோ விழாவில் கலாநிதி மாறன் அவர்கள் பேசியதாவது: நான் இன்னும் ’ஜெயிலர்’ படத்தை பார்க்கவில்லை. ஆனால் ’ஜெயிலர்’ படத்தை பார்த்த அனைவரும் சூப்பர் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்தின் கதையை முதலில் கேட்டது ரஜினி அவர்கள் தான். கதை எப்படி இருக்கிறது என்று நான் அவரிடம் கேட்டபோது கதை அருமையாக இருக்கிறது, நெல்சன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னார். இதே மாதிரி தான் எந்திரன் படத்திற்கும் சொன்னார்

என் தாத்தா கலைஞர் ரஜினியின் ரசிகராக இருந்தார், இப்போது நான் ரஜினி ரசிகராக இருக்கிறேன், எனக்கு பிறகு எனது அடுத்த தலைமுறையான எனது மகள் ரஜினியை ரசிக்கிறார். 5 தலைமுறையினர் ரசிகராக இருக்கிறார்கள். ரஜினி சார் அவர்களுக்கு போட்டி அவர்தான், வேறு யாரும் இல்லை

அவருக்கு தற்போது 72 வயது ஆகிறது, ஆனாலும் தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படம் பண்ண வரிசையில் இருக்கிறார்கள். இதே மாதிரி உங்களுக்கும் தயாரிப்பாளர்கள் நின்னால் நீங்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படலாம். அதுவரை இந்திய திரை உலகில் ரஜினி அவர்கள் மட்டுமே ஒரே சூப்பர் ஸ்டார், இதுதான் உண்மை' என்று கலாநிதி மாறன் பேசினார்.