close
Choose your channels

சம்பளத்துக்கு மேல் ஷேர்.. 'ஜெயிலர்' வெற்றியால் ரஜினிக்கு கிடைத்த மிகப்பெரிய தொகை..!

Friday, September 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது இந்த படம் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டி 600 கோடி ரூபாய் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரித்த திரைப் படங்களில் மிக அதிக வருமானம் கொடுத்த படங்களில் ஒன்றாக ‘ஜெயிலர்’ இருப்பதை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே ரஜினிக்கு ஒரு பெரிய தொகை ‘ஜெயிலர்’ படத்தில் நடிப்பதற்கு சம்பளம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் கிடைத்த லாபத்தில் ஒரு பகுதியை ரஜினிகாந்த் அவர்களுக்கு கலாநிதி மாறன் அவர்கள் கொடுத்தார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் ரஜினிகாந்த்துக்கு கலாநிதி மாறன் செக் கொடுக்கும் புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த படத்தில் கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதி ரஜினிக்கு அளிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க ரஜினிகாந்த் அவர்களுக்கு கிடைத்துள்ள சம்பளம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொகை என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment