close
Choose your channels

எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சூப்பர் பரிசு கொடுத்த கலாநிதி மாறன்..!

Friday, September 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பதையும் பார்த்தோம்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படங்களில் அதிக வசூல் செய்தது இந்த படம் தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஏற்கனவே அதிக சம்பளம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று கலாநிதி மாறன் ரஜினியை சந்தித்து லாபத்தில் ஒரு பகுதி பங்கை அவருக்கு கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.

இந்த நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் ஆடம்பர கார்களை வரிசையாக நிறுத்தி அதில் எதை வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கலாநிதி மாறன் கூறும் காட்சி உள்ளது.

அதில் பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 என்ற காரை ரஜினிகாந்த் தேர்வு செய்த நிலையில் அந்த காரின் சாவியை கொடுத்து அதில் ரஜினியை உட்கார வைத்து கலாநிதி மாறன் அழகு பார்த்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment