காந்திக்குப் பிறகு இன்னொரு தேசப்பிதா அப்துல்கலாம்… புகழாரம் சூட்டிய உலகநாயகன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல்கலாம் என்று விஞ்ஞானி அப்துல்கலாமின் 90 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உலகநாயகன் கமல்ஹாசன் தனது டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கனவு காணுங்கள் என்று இந்திய இளைஞர்களக்கு வழிகாட்டியவர் ஐயா அப்துல்கலாம். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை அவர்களின் லட்சியத்தை நோக்கி பயணிக்க வைத்தவர். விண்வெளி துறையில் இந்தியாவை முன்னேற்றிக் காட்டியவர். ஏழ்மையைத் தூக்கியெறிந்து உழைப்புக்கு ஒரு உயர்ந்த எடுத்துக்காட்டாக நிற்பவர். அவருடைய 90 ஆவது பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் “நேரிய வழியில் உழைத்துயர முடியுமென நிரூபித்தவர். இந்தத் தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர். பல கோடி இந்தியர்களை இலட்சியக் கனவுகளை நோக்கிச் செலுத்தியவர். காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல்கலாம் பிறந்தநாள் இன்று. அவர் வழி நின்று அறவழி செல்வோம்“ என்று உலகநாயகன் கமல்ஹாசன் தன்னுடைய டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு சோஷியல் மீடியாவில் தனிக்கவனம் பெற்று வைரலாகி வருகிறது.
நேரிய வழியில் உழைத்துயர முடியுமென நிரூபித்தவர். இந்தத் தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர். பல கோடி இந்தியர்களை இலட்சியக் கனவுகளை நோக்கிச் செலுத்தியவர். காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று. அவர் வழி நின்று அறவழி செல்வோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 15, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments