20 நாட்களில் இத்தனை கோடியா? கரன்சியை கொட்டிய 'கலகலப்பு 2'

  • IndiaGlitz, [Tuesday,February 27 2018]

சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேதரின் தெரசா நடித்த 'கலகலப்பு 2' திரைப்படம் வெளியான நாளில் இருந்து நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் 20 நாட்கள் வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படம் கடந்த 20 நாட்களில் சுமார் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ஒரு கோடி வசூல் செய்துள்ள இந்த படம் சென்னையில் ரூ.3.85 கோடியும், செங்கல்பட்டில் ரூ.6.95 கோடியும், கோவையில் ரூ.4.3 கோடியும், நெல்லை-குமரியில் ரூ.68 லட்சமும், மதுரை-ராமநாட் பகுதியில் ரு.1.75 கோடியும் வசூல் செய்துள்ளது.

இந்த படம் பட்ஜெட்டையும் தாண்டி வசூல் செய்துள்ளதால் இந்த ஆண்டின் வெற்றிப்பட பட்டியலில் இணைந்துள்ளது. மேலும் வேறு முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் ரிலீஸ் இல்லாததாலும், வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாகவும், இந்த படம் இன்னும் சில நாட்கள் தமிழகத்தில் ரிலீஸ் ஆன அனைத்து திரையரங்குகளில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பார்த்திபனின் இரண்டாம் பாக படத்தில் பிரபல நடிகர்

பார்த்திபன் இயக்கி நடித்த 'உள்ளே வெளியே' படம் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. 25 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க பார்த்திபன் முடிவு செய்துள்ளார்.

நயன்தாராவின் அடுத்த படத்தின் முக்கிய தகவல்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது 'இமைக்கா நொடிகள்', கொலையுதிர்க்காலம்', நரசிம்ம ரெட்டி, கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

என்னிடம் ஆதாரம் இருக்கின்றது: சம்பள பாக்கி குறித்து கவுதமி

நடிகர் கமல்ஹாசன் தனக்கு 'தசாவதாரம்' மற்றும் விஸ்வரூபம்' படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்ததற்கு சம்பளம் தரவில்லை என சமீபத்தில் நடிகை கவுதமி புகார் கூறியிருந்தார்.

ஸ்ரீதேவிக்காக 37 வருட வழக்கத்தை புறக்கணித்த ரஜினி

நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாயில் எதிர்பாராத வகையில் மரணம் அடைந்த நிலையில் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்த கோலிவுட் பிரமுகர்களான ரஜினி, கமல், நாசர் உள்பட பலர் மும்பை சென்றுள்ளனர்

கவுதமியின் சம்பள பாக்கி குற்றச்சாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் விளக்கம்

கவுதமியின் சம்பள பாக்கி குறித்த குற்றசாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ராஜ்கமல் நிறுவனம் கூறியதாவ்து: