சுந்தர் சியின் 'கலகலப்பு 2' சென்சார், ரன்னிங் டைம் மற்றும் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Thursday,January 18 2018]

சுந்தர் சி இயக்கிய கலகலப்பு' படத்தின் இரண்டாம் பாகமான 'கலகலப்பு 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சாருக்கு சென்றது.

சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து 'யூஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தின் எந்தவொரு காட்சியையும் கட் செய்யவில்லை என்று தயாரிப்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.


சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் 151 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 31 நிமிடங்கள் ரன்னிங் டைம் ஆக உள்ளது.

ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா, நந்திதா, சதீஷ், ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன் வையாபுரி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

More News

விஜய்-வினோத் திடீர் சந்திப்பு: பின்னணி என்ன?

கார்த்தி நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

கமல்-ரஜினி இருவரில் யாருக்கு மக்கள் வாக்களிப்பார்கள்: விஷால் கணிப்பு

"ரஜினி மற்றும் கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவதாக தாமதாக அறிவித்துள்ளனர். ஆனால் இந்த முடிவு மிகச்சரியான ஒன்றாகவே பார்க்க முடிகிறது.

வரும் தேர்தலில் ரஜினி, கமல், விஷால் செய்ய வேண்டியது என்ன? பிரகாஷ்ராஜ்

கடந்த சில மாதங்களாகவே அரசியல் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். குறிப்பாக பிரதமர் மோடியை நேரடியாக தாக்கி பிரகாஷ்ராஜ் விமர்சனம் செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

என்ன புரட்சி செய்கிறார்கள் என்று பார்க்கலாம்: கமல்-ரஜினியை கிண்டல் செய்த வைகோ

ரஜினிக்கும் கமலுக்கும் கடந்த சில மாதங்கள் வரை ஆதரவு கொடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போது இருவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் கிண்டலாக பதிலளித்துள்ளார்.

10 நிமிடம் தாமதம் ஒரு குற்றமா? ஆசிரியர் தண்டனையால் பலியான சென்னை மாணவன்

சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் படிக்கும் மாணவர் ஒருவர் பள்ளிக்கு பத்து நிமிடங்கள் தாமதமாக வந்ததால் ஆசிரியர் கொடுத்த தண்டனையின் காரணமாக பரிதாபமாக பலியானார்