சுந்தர் சியின் 'கலகலப்பு 2' சென்சார், ரன்னிங் டைம் மற்றும் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Thursday,January 18 2018]

சுந்தர் சி இயக்கிய கலகலப்பு' படத்தின் இரண்டாம் பாகமான 'கலகலப்பு 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சாருக்கு சென்றது.

சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து 'யூஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தின் எந்தவொரு காட்சியையும் கட் செய்யவில்லை என்று தயாரிப்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.


சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் 151 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 31 நிமிடங்கள் ரன்னிங் டைம் ஆக உள்ளது.

ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா, நந்திதா, சதீஷ், ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன் வையாபுரி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.