ஜீவா-நிக்கி கல்ராணிக்கு கிடைத்த டபுள் சந்தோஷம்

  • IndiaGlitz, [Wednesday,January 24 2018]

நடிகர் ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவான 'கலகலப்பு 2' திரைப்படம் வரும் 9ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இதே தேதியில் 'கீ' படமும் ரிலீஸ் ஆகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவெனில் 'கீ' படத்திலும் ஜீவா, நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்துள்ளனர். ஒரே நாளில் இருவரும் இணைந்து நடித்த இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவது அபூர்வமான நிகழ்வாக கருதப்படும் நிலையில் இந்த பெருமை ஜீவா-நிக்கி கல்ராணிக்கு ஜோடிக்கு கிடைத்தது டபுள் சந்தோஷமாக கருதப்படுகிறது.

'கலகலப்பு 2' படத்தை சுந்தர் சியும் ,'கீ' படத்தை காலீஷூம் இயக்கியுள்ளனர். இந்த இரண்டு படங்களும் ஜீவா, நிக்கி கல்ராணி ஜோடிக்கு வெற்றிப்படமாக அமைய நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்